கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை பரவலாக மழை பெய்தது. மழை அளவு மி.மீ., விபரம்: கள்ளக்குறிச்சி 26, தியாகதுருகம் 18, கச்சிராயபாளையம் 27, கோமுகி அணை 85, மூரார்பாளையம் 15.20, வடசிறுவளூர் 85, கடுவனுார் 17, மூங்கில்துறைப்பட்டு 26, அரியலுார் 3, ரிஷிவந்தியம் 20, கீழ்பாடி 17, கலையநல்லுார் 13, மணலுார்பேட்டை 34, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 16, திருக்கோவிலுார் (வடக்கு) 9, திருப்பாலபந்தல் 3, வேங்கூர் 4, பிள்ளையார்குப்பம் 31, எறையூர் 40, உ.கீரனுார் 16 மி.மீ., மழை பதிவானது. உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் மின்னல் தாக்கி மனோகரன் என்பவரது பசுமாடு இருந்தது. மேலும், ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, குமார் மனைவி தாமரைச்செல்வி, அத்திப்பாக்கம் அய்யப்பன், பரமநத்தம் பூங்காவனம் ஆகியோரது கூரை வீடுகள் மற்றும் கூச்சிக்கல்வளவு ராஜி என்பவரது ஷீட் வீடு ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது.