பணிக்கனூர் சூளைமுனியப்பன் கோயில் ஆடி திருவிழா!

சங்ககிரி :பணிக்கனூர் சூளைமுனியப்பன் கோயில் ஆடி திருவிழா.. பொங்க வைத்து, ஆடு,கோழிகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு..

Update: 2024-08-12 04:11 GMT
சேலம் மாவட்டம், பணிக்கனூரில் உள்ள அருள்மிகு சூளைமுனியப்பன் கோயில் ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு சூளை முனியப்பன் கோயில் ஆடி பொங்கல் திருவிழாவிவினையொட்டி இரு முனியப்பன் சுவாமிகள், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ முன்னுடையான் சுயம்பு சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, திருமஞ்சனம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது .இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பொங்கல் வைத்து சுவாமிக்கு ஆடுகளை பலியிட்டு நேர்த்திகடனை செலுத்தினர்.

Similar News