தீக்குண்டத்தில் தவறி விழுந்த சிறுவன் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி
கும்முடிப்பூண்டி அருகே தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த சிறுவன் படுகாயம் 40% காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
கும்முடிப்பூண்டி அருகே தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த சிறுவன் படுகாயம் 40% காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது காட்டு கொல்லை கிராமம். இங்குள்ள சுமார் 300 குடும்பத்தினர் வழிபட்டு வரும் சக்தி மாரியம்மன் திருக்கோவில் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கோவில் நிர்வாகத்தால் ஓராண்டு நிறைவை ஒட்டி தீமிதி திருவிழா செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி பந்தக்கால் நடவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 11 நாட்களாக 100 பக்தர்கள் காப்பு கட்டி விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது. நிறைவாக ஆடி நான்காம் பாரமான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்த நூறு பக்தர்களும் ஏழு மணி அளவில் இரவு தீக்குழியில் இறங்கினார்கள். அப்போது காட்டுக்கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது ஏழு வயது மகன் மோனிஷ் என்பவர் தீக்குழி இறங்கினார். நிலை தடுமாறி தீக்குழியில் விழுந்த சிறுவன் மோனிஷ் 40% தீக்காயங்களுடன் கோயில் நிர்வாகம் மீட்டது. அங்கிருந்த அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் மோனிஸ் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை கே எம் சி மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்ற வருகிறார். இச்சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடி மிகவும் விமர்சியாக நடைபெற்ற இந்த தீமிதி திருவிழாவில் சிறுவன் தீகுண்டத்தில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.