கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறி தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் நான்காம் தேதி கோவை சைபர் களின் போலீசார் கைது செய்த போது அவரிடம் கஞ்சா இருந்ததாக தெரிவித்து தேனி போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநர் உள்ளிட்ட மூவர் மீது கஞ்சா வழக்கு பதியப்பட்டது தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் இந்த வழக்கினை விசாரித்து வந்த நிலையில் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பெயரில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவின் பெயரில் சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது பல்வேறு வழக்குகளில் இருந்து ஜாமின் பெற்று வந்த சவுக்கு சங்கருக்கு தற்போது தேனியில் கஞ்சா வழக்கில் புதிதாக குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது