திருவெண்ணைநல்லூர் அருகே சுடுகாடு இருக்கு ஆனா சுடுகாட்டுக்கு பாதை இல்லை சடலத்தை விவசாய நிலத்துக்கு பயன்படுத்தும் வழியில் கொண்டு செல்லும் அவலம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரியசெவலை கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இதில் 7000க்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்ற இந்த கிராமத்தில் கிராம எல்லையில் சுடுகாடு மட்டும் உள்ளது ஆனால் சுடுகாடுக்கு வழியில்லாமல் இறப்பு காலங்களில் சடலங்களை எடுத்துச் செல்வதற்கு விவசாயிக்கு சொந்தமான நில வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது தற்பொழுது பெரிய செவலை கிராமத்தில் திருவேங்கடம் என்பவருடைய மகன் மணிகண்டன் 40 வயதான இவர் உடல்நலக் குறைவால் இன்று இறந்துவிட்டார் இவர் சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் கிராம மக்கள் விவசாய நிலத்தில் இருந்து சின்ன பாதையில் வாகனம் மூலம் எடுத்துச் சென்ற பொழுது வாகனம் சிக்கிக் கொண்டது பின்னர் வெகு நேரம் கழித்து வாகனத்தை பதமாக எடுத்துச் சென்றன இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இனியாவது எங்கள் கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.