சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா
திருச்செங்கோடு, வையப்பமலை கவிதா ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இளைஞர் செஞ்சுருள் சங்கம் மற்றும் எலச்சிபாளையம் காவல் நிலையமும் இணைந்து சர்வதேச போதைப்பொருள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது . இதில் கல்லுரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர் . இக்கருத்தரங்கில் கல்லூரியின் தாளாளர் முனைவர் ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் ரா .விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எலச்சிபாளையம் காவல் நிலைய துணை ஆய்வாளர் உயர்திரு M. ராஜேந்திரன் கலந்து கொண்டு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் குற்ற செயல்கள் பற்றியும் அதனால் வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியின் இறுதியாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது இளைஞர் செஞ்சுருள் சங்க அலுவலர் மற்றும் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் M. மகேந்திரன் நன்றியுரையாற்றினார். NSS ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத்துறை தலைவர் C. ராஜேஷ் மற்றும் YRC ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறைத் தலைவர் K. தர்மலிங்கம் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.