கடற்பசுவை மீண்டும் உயிருடன் கடலில் விட்ட மீனவருக்கு பாராட்டு!

நிகழ்வுகள்

Update: 2024-08-13 05:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்டது தெற்கு புதுக்குடி மீனவ கிராமம். இந்த மீனவ கிராமத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளின் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்று வருகின்றனர்.அவ்வாரு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலையில் உண்ணும் உணவிற்கான மீன்களை போல கடலில் மிகவும் அரிதாக இருக்கும் கடற்பசு,கடல் குதிரை, கடல் அட்டைகள் போன்றவைகள் சிக்குவதும் உண்டு. அவ்வாறு மீனவர் வலையில் சிக்கும் அரிய வகை கடற் உயிரினங்களை திரும்பவும் கடலுக்குள் விட்டு வரக்கோரி தமிழக மீன்வளத் துறையின் சார்பாக பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு பொதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கருப்பையா என்பவர் நேற்றைய தினம் மீன்பிடிக்க கடல் பகுதிக்கு சென்ற பொழுது பாக்சலசந்தி பகுதியில் அவருடைய வலையில் அரிய வகை கடல் உயிரினமான கடற்பசு சிக்கி உள்ளது. இதனைக் கண்ட மீனவர் அந்த கடற்பசுவை மிகவும் பத்திரமாக மீண்டும் கடலுக்குள் விட்டுவிட்டு அந்த செய்தியை தமிழக வனத்துறை மற்றும் கடலோர காவல் படையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் கடற்பசுவை அவர் உயிருடன் கடலுக்குள் விட்ட வீடியோவையும் அவர் பகிர்ந்ததன் அடிப்படையில் தமிழக வனத்துறை மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீனவர் கருப்பையாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.. மேலும் அறிய வகை உயிரினமான கடற்பசுவை மீண்டும் உயிருடன் கடலுக்குள் விட்டு வந்த மீனவருக்கு தமிழக அரசு உரிய சன்மானம் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று மீனவர்களிடயே கோரிக்கை எழந்துள்ளது..

Similar News