கபிலர்மலை அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது.

பரமத்தி ஒஏலூர் அடுத்துள்ள கபிலர்மலை அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது.

Update: 2024-08-13 12:44 GMT
பரமத்தி வேலூர்,ஆக.13- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சென்ன பள்ளிவாசல் எதிரில் குடியிருந்து வருபவர் அஷ்ரப் அலி(38). இவர் கபிலர்மலை டாஸ்மாக் கடை அருகே உள்ள சில்லி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமாரபாளையம் தட்டான் குட்டை அருகே சடையம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்( 44 )என்பவர் ஜேடர்பாளையத்தில் வசிக்கும் தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் . பின்னர் கபிலர் மலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு வந்து மது பாட்டில்களை வாங்கி மது அதிகளவில் அருந்திவிட்டு போதையில் அருகில் இருந்த சில்லி கடைக்கு சென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த அஷ்ரப் அலி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஆத்திரமடைந்த சீனிவாசன் அஷ்ரப் அலிஎன்பவரை கடையில் இருந்த கட்டையை எடுத்து தலையில் தாக்கியுள்ளார் இதில் அஷ்ரப் அலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .தகவலின் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சமூக இடத்திற்கு விரைந்து சென்று அசரப்ப வழியை தாக்கி காயப்படுத்திய சீனிவாசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்

Similar News