தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வரும் 19ம் தேதி முதல் செப்., 6ம் தேதி வரை நடக்கிறது. 23-ஏ, ரங்கநாதன் தெரு, ஹோட்டல் உட்லண்ஸ் காம்பளக்ஸ், முதல் மாடி, சென்னை - திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் என்ற முகவரியில் இயங்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் விழா நடக்கிறது. சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம். அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம், 35 சதவீதம், மற்றும் 40 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.