சத்துணவு கூடத்தை இடிக்க வந்த நெடுஞ்சாலை துறையினர் எதிர்ப்பு தெரிவித்து நின்ற பள்ளி குழந்தைகளால் பரபரப்பு
சத்துணவு கூடத்தை இடிக்க வந்த நெடுஞ்சாலை துறையினர் எதிர்ப்பு தெரிவித்து நின்ற பள்ளி குழந்தைகளால் பரபரப்பு
பூந்தமல்லி அடுத்த மாங்காடு அருகே பட்டு கூட்டுச்சாலையில் இருந்து மவுலிவாக்கம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பட்டு பகுதியில் கிறிஸ்துவ தேவாலயத்தில் பகுதியிலேயே அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் 120 குழந்தைகள் படித்து வருகின்றன. கிறிஸ்தவ தேவ ஆலயத்தின் முகப்பு மற்றும் பள்ளியின் சத்துணவு கூடம் இடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்ததை அடுத்து பள்ளி குழந்தைகள் அங்கு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வருபவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரம் அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கிறிஸ்தவ தேவாலயத்தின் முகப்புகளை இடிப்பதற்கு கால அவகாசம் கொடுத்துவிட்டு சென்றனர்.மற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் பகுதியில் மழை நீர் கால்வாய் அமைக்கப்படும் எனவும் கிறிஸ்துவ தேவ ஆலயத்தின் முகப்பு மற்றும் காம்பவுண்ட் சுவரை இடிக்க அதிகாரிகள் வந்த நிலையில் அங்கு பயிலும் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் பள்ளியின் சத்துணவு கூடம்,கழிவறைகள் இடித்தால் பயிலும் 120 பள்ளி குழந்தைகள் பாதிப்படைவார்கள் என்பது குறிப்பிடத்ககது. இது குறித்து பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறுகையில் இந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் பள்ளிக்கு அரசு சத்துணவு திட்டத்தின் கீழ் தினமும் சத்துணவு அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது எனவே இந்த பள்ளியில் ஆக்கிரமிப்பு என சத்துணவு கூடம் மற்றும் கழிப்பறையைய் எடுத்தால் சத்துணவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் அது மட்டும் இன்றி 120 மாணவர் குழந்தைகள் பாதிப்படைவார்கள் எனவும் குழந்தைகள் பட்டினி கிடக்கக்கூடிய சூழல் உண்டாகும் எனவே இந்த திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.