திருமணிமுத்தாறு மற்றும் நீர்வழிப் பாதைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள திருமணிமுத்தாறு மற்றும் நீர் வழிப்பாதைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வேலூர், ஆக.14- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, திருமணிமுத்தாறு பாலம் மற்றும் நீர்வழிப்பாதை, எஸ். வாழவந்தி சாலை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பில்லூர் ஊராட்சியில், திருமணிமுத்தாறில் பாலம் மற்றும் நீர்வழிப்பாதை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருமணிமுத்தாற்றில் நீரின் வரத்து, ஆற்றின் வழிப்பாதை உள்ளிட்டவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பரமத்திவேலுாரில் இருந்து மோகனூர் சாலை முதல் எஸ்.வாழவந்தி வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.