நகராட்சி அலுவலகத்தில் கொடி கட்டும் வேலை பார்க்கும் சிறுவர்கள்
நகராட்சி அலுவலகத்தில் கொடி கட்டும் வேலை பார்க்கும் சிறுவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி கட்டிட அலுவலக கட்டிடத்தை அலங்கரிக்கும் விதமாக தேசிய கொடி கட்டுதல், சீரியல் லைட்டுகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த பணியினை மேற்கொள்ளும் நகராட்சி நிர்வாகம் வேலை செய்யும் நபர்களுடன் சேர்த்து 2 சிறுவர்களை வைத்து வேலை வாங்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. சிறுவர்கள் 50 அடி உயரமுள்ள நகராட்சி கட்டிடத்தின் மேல் நின்று ஆபத்தை உணராமல் கொடி கட்டக்கூடிய காட்சி நம்மால் காண முடிகிறது . இந்த கட்டிட அலுவலகத்தில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சிறுவர்கள் தற்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எம்எல்ஏ நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வேலை வாங்குவது சட்டப்படி குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது எம்எல்ஏ கண்முன்னே 2 சிறுவர்கள் நகராட்சி கட்டிடத்தில் ஆபத்தான முறையில் கொடி கட்டும் வேலை பார்க்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது போன்ற செயல்களுக்கு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.