இந்து சமய அறநிலையத்துறை சுதந்திர தின பொது விருந்தில் சலசலப்பு

இந்து சமய அறநிலையத்துறை சுதந்திர தின பொது விருந்தில் சலசலப்பு

Update: 2024-08-15 10:45 GMT
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான கைலாசநாதர் கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். பொது விருந்து நிகழ்ச்சியில் 12.30 மணிக்கு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் மதியம் 1.30 மணிக்கும் மேலாக பொதுமக்கள் காத்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் பொது விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சரிவர செய்யாததால் உணவு அருந்த இருநூற்று ஐம்பது பேர் உட்கார வேண்டிய நிலையில் 100 பேர் கூட உட்கார முடியாத அளவுக்கு இருக்கைகள் இருந்தது. இதனால் பொதுமக்கள் உணவருந்த தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் எம்எல்ஏ ஈஸ்வரன் தலையிட்டு மேலும் 2 வரிசை இருக்கைகள் போட அறிவுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் பொது விருந்தினர் நிகழ்ச்சியில் உணவு அருந்தி சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கமாக சரிவர செய்யும் கோவில் நிர்வாகம் இந்த ஆண்டு சரிவர செய்யாததால் பொது விருந்து நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

Similar News