மகளிர் சுய உதவி குழு பி எல் எப் ல் முறைகேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மகளிர் சுய உதவி குழு பி எல் எப் ல் முறைகேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த மரப்பரை ஊராட்சியில்நடந்த கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டார்.கூட்டத்தில் வருவாய் துறை பொதுப்பணித்துறை மருத்துவத்துறை உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களிடமிருந்து குறைகள் கேட்க எம்எல்ஏ அழைப்பு விடுத்தார் இதனை தொடர்ந்து பேசிய இளவரசி என்பவர் மறப்பரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பி எல் எப்பில் கணக்காளராக உள்ள சத்யா என்பவர் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு தெரியாமலேயே போலியாக அவர்களது கையெழுத்தை போட்டு பணத்தை எடுத்து இதுவரை திருப்பிக் கட்டாததால் பி எல் எப் திவாலானதாக அறிவிக்கப் போவதாக கூறப்படும் நிலையில் தங்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்றும் 23 லட்ச ரூபாய் கடன் இருப்பதாக கூறப்படுகிறது இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளவரசி என்ற பெண் குற்றம் சாட்டினார் இதனை தொடர்ந்து பல பெண்களும் சத்யா பணத்தை முறைகேடாக பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமலேயே தங்களது கணக்கில் பணத்தை எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்கள் இதுகுறித்து இன்றைய கிராம சபை கூட்டத்தில் உரிய அதிகாரிகள் யாரும் இல்லாததாலும் சத்யா கலந்து கொள்ளாததாலும் விசாரணை நடத்த முடியாது இதற்கான அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடத்தி சத்யா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மகளிர் குழுவினர் குற்றம் சாட்டுபவர்கள் அனைவரையும் வரவழைத்து நேரில் வைத்து பேசி உரிய தீர்வு காண்பதாக எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்ததை அடுத்து பெண்கள் அமைதியாக அமர்ந்தனர்.இதேபோல் வையப்பமலை பின்புறம் உள்ள பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் இங்கு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் வைத்து தண்ணீர் புளுவுடன் இருப்பதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,தண்ணீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் திறந்து விடுவதாகவும் தண்ணீர் திறந்து விடும் பிரகாஷ் என்பவரை கேட்டால் யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள் என மிரட்டுவதாகவும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் தொட்டியை மாதத்திற்கு இருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் எனவும் சாமுண்டீஸ்வரி என்பவரது தலைமையில் அந்தப் பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மரப்பரை ஊராட்சி தலைவர் பழனியப்பன் நேரடியாக தொட்டி இருக்கும் இடத்தை ஆய்வு செய்துதூய்மைப்படுத்த வேண்டுமெனவும் தண்ணீர் திறந்து விடுவதில் ஒருதலைச் பட்சமாக செயல்படுவதாக தெரிந்தால் பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி தலைவர் பழனியப்பனை கேட்டுக் கொண்டார்.