சங்ககிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்....

சங்ககிரி: காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்....

Update: 2024-08-15 13:25 GMT
நாட்டின் 78வது சுதந்திரதினவிழா சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கொண்டாடப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சங்ககிரியில் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர் நாட்டின் சுதந்திரத்திற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர்களின் பங்களிப்பு குறித்தும், முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார். சங்ககிரி நகரத் தலைவர் ரவி இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் மணி, மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், ராமமூர்த்தி, மாணவர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அகில், மூத்த நிர்வாகிகள் கரும்பாயிரம், அங்கமுத்து, அண்ணாமலை, ஜி.ஆறுமுகம், இலக்கிய அணி செங்கோட்டுவேலு, குமார், விஸ்வநாதன், ஆறுமுகம், வீராசாமி, துரைராஜ், பரமன்,செந்தில், காமராஜ், இஸ்மாயில், நாசர், கந்தசாமி, ரவி, மோகன், முரளி, ஜெகநாதன், குருசாமி, வெங்கடேஷ், மாணவர் காங்கிரஸ் கேப்ரியல் ரியாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News