அலங்கார அன்னை ஆலயத் திருவிழா
சிவகங்கை அலங்கார அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தோ் பவனி பங்கேற்ற நடைபெற்றது
சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி தோ் பவனி நடைபெற்றது. சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத் திருவிழா கடந்த 6 -ஆம் தேதி கொடியேற்றம், சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. இதையடுத்து 7-ஆம் தேதி முதல் 13 -ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு நவ நாள் திருப்பலியும், இரவு 8 மணிக்கு புனித ஜெபமாலை நிகழ்வும் நடைபெற்றன. 11-ஆம் தேதி புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளியில் இருந்து பேராலயம் வரை திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்ற நற்கருணை பவனி நடை பெற்றது. இதையடுத்து, சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் பிஷப் சூசைமாணிக்கம் பங்கேற்று திருப்பலியை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட மின்னலங்காரத் தேரில் புனித அலங்கார அன்னை பவனி வந்தாா். இதில், பங்குத் தந்தைகள் அருள்ஜோசப், பெனடிக்ட்பா்னபாஸ், சேவியா், கிளிண்டன், சேசு, இன்பெண்ட், மரியடெல்லஸ், செபாஸ்டின், மரிய அந்தோணி, மறை மாவட்ட பொருளாளா் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் பால்ராஜ், அருளானந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லூா்து ஆனந்தம் பங்கேற்று நன்றி திருப்பலி நடத்தி, கிறிஸ்தவா்களுக்கு ஆசியுரை வழங்கினாா். பின்னா், கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளைக் பங்குத் தந்தை சேசுராஜா, உதவி பங்குத் தந்தை கிளிண்டன், பங்கு பேரவை, இறைமக்கள் செய்தனா்.