டி.இ.ஓ., அறிவிப்பால் ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு

தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததால் மல்லசமுத்திரத்தில் நேற்று நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2024-08-16 09:14 GMT
மல்லசமுத்திரம் ஒன்றியத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பு பயன்பாட்டு கட்டண தொகையை கல்வித்துறை நேரடியாக, பி.எஸ்.என்.எல்,, நிறுவனத்திற்கு செலுத்திட வேண்டும். ஒன்றியத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விலையில்லா சீருடைகள், புத்தகபைகள் உள்ளிட்ட கல்விநலத்திட்ட பொருட்களை தரமான நிலையில் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும். மாணவர்களின் தேவைக்கேற்ப விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், எண்ணும்எழுத்தும் பயிற்சி ஏடுகள், ஒரே தடவையில் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும். ராமாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்விநலன் கருதி அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றுப்பணி ஆசிரியர் நியமனம் விரைந்து செய்யப்பட வேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்குரிய வழிவகை காணுதல் வேண்டும். மாணவர்களின் நலன்கருதி ஆதார்எடுத்தல், ஆதார் மேம்படுத்தலுக்கான ஆதார்மைய முகாம் அனைத்து பள்ளிகளிலும் அமைத்திட வேண்டும். கல்வி சான்றுகளின் உண்ணைமைத்தன்மை சான்றுகள் உடனுக்குடன் ஒன்றிய ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற செய்ய வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி வகுப்பின் கருத்தாளர்களாக நியமிப்பதை கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட 10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் கடந்த ஜூலை 19ம்தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நேற்று, மல்லசமுத்திரம் வட்டாரகல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக, பேராட்டம் நடத்த போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போராட்டம் அறிவித்திருந்தனர். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்ட தொடக்கநிலை அலுவலர் சுப்பரமணியன் கோரிக்கைளை நிறைவேற்றி தருவதாக ஒப்புதல் அளித்ததால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Similar News