பாண்டமங்கலம் மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்.

பரமத்தி வேலூர் அடுத்துள்ள பாண்டமங்கலம் மாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-08-16 12:37 GMT
பரமத்தி வேலூர்,ஆக.16: பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணியளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களில் பால் நிரப்பி அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பால்குடங்களுடன் காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக பாண்டமங்கலம் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு 1008 பால் குடல்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கலந்து கொண்டு மாரியம்மன் மற்றும் பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். இறுதியில் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News