சாலை விபத்தில் வியாபாரி பலி.
வேலகவுண்டம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தி காய்கறிகள் வியாபாரி பலியானது குறித்து போலீணார் விசாரணை.
பரமத்திவேலூர், ஆக.16- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெரிய மணலி பகுதியில் நின்று கொண்டிருந்த மினி ஆட்டோ பால் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ஏழூர் அருகே உள்ள கருங்குமரன்பாளையம், வேப்பம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சரவணன் (44). காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் பெரியமணலிக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டி ம்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மினி ஆட்டோ பால் வண்டியில் எதிர் பாராத விதமாக சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.