வேலூர் அரிமா சங்கம் சார்பில் பாலூட்டும் தாய்மார்கள்,கர்பிணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்பிணிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  அரிமா சங்க சார்பில் நடைபெற்றது

Update: 2024-08-16 14:26 GMT
பரமத்தி வேலூரில் வேலூர் அரிமா சங்கம் சார்பில் பாலூட்டும் தாய்மார்கள்,கர்பிணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜெயந்தி வரவேற்புரையாற்றினார். பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் நல மருத்துவ டாக்டர் இந்துமதி பேசுகையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே தொடர்ந்து ஆறு மாதத்திற்கு வழங்க வேண்டும். பிற உணவு வகைகள் எதுவும் கொடுக்கக் கூடாது. பிறந்த குழந்தைக்கு சர்ககரை தேன் உள்ளிட்ட உணவுகளை நாக்கில் வைக்க கூடாது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்பது முற்றிலும் தவறானது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உடலை ஒல்லியாக வைத்திருக்க உதவும்.  ஒரு குழந்தைக்கு மற்றும் அடுத்த குழந்தைக்கு குறைந்தபட்சம் மூன்று வருடம் இடைவெளி தேவை. குழந்தைக்கு மூன்று வருடங்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என கூறினார்.இவ்விழாவில் கலந்து கொண்ட  40 பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் 40 பேர்களுக்கு வேலூர் அரிமா சங்க சார்பில்பிஸ்கட்,பன்,ஹார்லிக்ஸ், பழங்கள்,கடலை,மிட்டாய் அடங்கியவை வழங்கப்பட்டது. தாய்ப்பால் வழங்குவது அவசியம் கருப்பை புற்றுநோய் பரிசோதனைகள் அதற்கான விழிப்புணர்வு குறித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ நெடுஞ்செழியன், முன்னாள் பரமத்தி வேலூர் பேரூராட்சி தலைவர் வேலுச்சாமி, டாக்டர் சாந்தி கண்ணன்,கண்ணன் கார்டுவேர்ஸ் கண்ணன், உள்பட அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News