ஆடி கடைசி வெள்ளி வளையல் அலங்காரத்தில் வேலூர் கொங்கலம்மன்.
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 14 ஆம் ஆண்டு வளையல் அலங்காரத்தில் வேலூர் கொங்கலம்மன்.
பரமத்தி வேலூர்.,ஆக:16- பரமத்தி வேலூர் தெற்கு தெரு தேர் நிலையம் அருகில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோவில். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் 14 ஆம் ஆண்டு விழாவின் 15 ஆம் தேதி வியாழக்கிழமை கொங்கலம்மனுக்கு பால் குட அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று. தொடர்ந்து அம்மனுக்கு வண்ண வண்ண வலையல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கொங்கலம்மனை தரிசனம் செய்தனர்.