புதுஉச்சிமேட்டை தனி வருவாய் கிராமமாக பிரிக்க வேண்டும்

வேண்டும்

Update: 2024-08-17 02:53 GMT
புதுஉச்சிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக பிரித்து இயக்க வேண்டும் என கோரிக்கை மனுவினை பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் வருவாய் கிராமம், கொங்கராயபாளையம் மற்றும் புதுஉச்சிமேடு ஊராட்சிகளை உள்ளடக்கி உள்ளது. புது உச்சிமேடு ஊராட்சியில் பழைய உச்சிமேடு, ராமநாதபுரம், பட்டி, புது உச்சிமேடு என நான்கு கிராமங்கள் உள்ளன. கொங்கராயபாளையம் வருவாய் கிராமம் மாவட்டத்திலேயே அதிகப்படியான சர்வே எண்கள். மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. புதுஉச்சிமேடு 3,000 வாக்காளர்கள், 5,000 பொதுமக்கள், கொண்ட ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியை பிரித்து 40 ஆண்டுகள் ஆகியும், வருவாய் கிராமமாக பிரியாமல் உள்ளதால், பழைய உச்சிமேடு, ராமநாதபுரம், பட்டி, புதுஉச்சிமேடு கிராம மக்கள் 6 கி.மீ., தொலைவிற்கு பஸ் வசதி இல்லாத நிலையில் நடந்தே கொங்கராயபாளையம் சென்று பட்டா, சிட்டா, அடங்கல்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற அரசு திட்ட அனுமதி மற்றும் பதிவுகளை பெற வேண்டி உள்ளது. எனவே புதுஉச்சிமேடு தனி வருவாய் கிராமமாக பிரித்து கொடுக்க வேண்டும். அத்தடன் பழைய உச்சிமேடு முதல் ராமநாதபுரம் வரையிலான தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதில் வாகனங்களை இயக்க முடியாமல் நாங்கள் பரிதவிக்கிறோம். எனவே இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளனர்.

Similar News