பரமத்தி அருகே சாலை விபத்தில் சென்னையை சேர்ந்தவர் பலி.

பரமத்தி வேலூர் அடுத்துள்ள பரமத்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்தர் பலியானது குறித்து போலீசார் விசாரணை.

Update: 2024-08-17 07:49 GMT
பரமத்தி வேலூர்,.17: சென்னை, கொளத்தூர், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் அவரது தந்தை பூச்சி நாயுடு(71), அவரது தாய் சரசு, கொளத்தூர், பூம்புகார் நகரைச் சேர்ந்த பரசுராம் என்பவரது மனைவி நிர்மலா ஆகியோர் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா நடத்தை அருகே உள்ள சின்னசூரம்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்தில் வழியாக கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் வந்து கொண்டு இருந்தனர். பரமத்தி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே கார் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஒட்டி வந்த கார் டிரைவர் சென்னை, ஜி.கே. காலனியைச் ஏழுமலை, பூச்சிநாயுடு, அவரது மனைவி சரசு,மகன் ஜனார்த்தனன் மற்றும் நிர்மலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரையும் அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பூச்சி நாயுடு உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ஏழுமலை, நிர்மலா, ஜனார்த்தனன், சரசு ஆகிய நான்கு பேர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News