தாளவாடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

தாளவாடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2024-08-17 12:38 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா தமிழர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்று பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாளவாடி ஒன்றிய செயலாளர் சித்து, மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் மாதேஷ், மாவட்ட அமைப்பாளர் இ.எ.பா.ச பிரதீப், மாணவரணி அமைப்பாளர் சிவா, கட்சி நிர்வாகிகள், தாளவாடி வட்டார அம்பேத்கர் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வெற்றி கழகம், SDPI கட்சியினர் கலந்து கொண்டு தாளவாடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தொல்.திருமாவளவன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடினர்.

Similar News