சங்ககிரி பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை!

சங்ககிரி:தேவூர், அரசிராமணி சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை!

Update: 2024-08-17 14:00 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர்,அரசிராமணி பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, ஒடச்சக்கரை, காவேரிபட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூர், மோட்டூர், தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, கல்வடங்கம், நல்லங்கியூர், செங்கானூர், பொன்னம்பாளையம், கே.மேட்டுப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பாலிருச்சம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு கிணற்று நீர், ஆற்றுநீர் பாசனங்களை கொண்டு வெண்டைக்காய் சாகுபடி அதிகளவில் செய்து வந்தனர். இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கேரளமாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வியாபாரிகள் வெண்டைக்காய்களை வாங்கிச்செல்ல வராததால் கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 வரை விற்பனையான வெண்டைக்காய் தற்போது அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.6 வரை மட்டும் உள்ளூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

Similar News