பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு கடைகளுக்கு அபராதம் விதித்த ஆணையர்
பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு கடைகளுக்கு அபராதம் விதித்த ஆணையர்
திருச்செங்கோடு நகர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகள் நகராட்சி ஆணையர் இரா சேகர் தலைமையில் சுகாதார அலுவலர் வெங்கடாசலம் சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆய்வில் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.20 கடைகளுக்கு தல ரூபாய் 1000 வீதம் 20,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதிக அளவு அபராதமும் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்