திருப்பத்தூரில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்!

திருப்பத்தூரில் மனித கழிவுகளை பொதுவெளியில் மனிதனே அகற்றும் அவலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி?

Update: 2024-08-19 09:13 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மனித கழிவுகளை பொதுவெளியில் மனிதனே அகற்றும் அவலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி? திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு கோட்டை தெரு பகுதியில் பாதாள சாக்கடையில் பைப்லைன் உடைந்து கழிவு நீர் கால்வாயில் கலப்பதாக கூறப்படுகிறது. மேலும்அதனை சரி செய்ய நகராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த கழிவுகளை அள்ளுவதற்கு உரிய எந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் தூய்மை பணியாளர்கள் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. மனித கழிவுகளை மனிதனே அகற்ற மனிதனை பயன்படுத்திய நிகழ்வு மனித நேயத்தை இழக்க செய்துள்ளது. இதனை தொடர்ந்து திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் நிகழ்வு ஆங்காங்கே நடைபெற்று வருகிறது இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Similar News