எச்ஐவி பாதிப்பு குறித்து கிராமிய கலைகள் மூலம் ஆடி பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுயை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
விழிப்புணர்வு
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்ஐவி, காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் இரண்டு கிராமிய குழுக்கள் மூலமாகவும் பிரச்சார வாகனம் மூலமாகவும் 40 இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இந்நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா கொடி அசைத்து துவக்கி வைத்தார் அப்போது கிராமிய கலைஞர்கள் ஆட்சியர் முன்பு கிராமிய கலைகளை ஆடி பாடி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கினார் எச்ஐவி, பால்வினைதொற்று, ரத்ததானம், காசநோய் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து பொது மக்களிடம் கிராமிய கலைகள் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது