மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நண்பகலில் வானம் மேகமூட்டத்துடன் மாறத் தொடங்கி மிதமான கன மழையாக பெய்யத் தொடங்கியது. தேனி, கருவேல் நாயக்கன் பட்டி, குன்னூர் அரண்மணைப்புதூர், அம்மச்சியாபுரம், அய்யனார்புரம், அல்லிநகரம் , அரப்படித்தேவன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி, மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான கன மழை பெய்தது. வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.