கிணற்றில் விழுந்த மயில் உயிருடம் மீட்ட தீயணைப்பு துறையினர்.
பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே கிணற்றில் விழுந்த மயிலை ஊயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
பரமத்திவேலூர்,.19: பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சிறுகிணத்துப்பாளையம் குன்னங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு( 53). விவசாயி இவரது விவசாய தோட்டத்தில் விவசாய பயன்பயன் பாட்டுக்காக 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அந்த கிணற்றில் சுமார் 20 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்நிலையில் தங்கராசு விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது கிணற்றில் இருந்த தண்ணீரில் ஆண் மயில் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராசு அருகில் இருந்தவர்களை அழைத்து கிணற்று தண்ணீரில் விழுந்து போராடிக்கொண்டிருந்த கொண்டிருந்த மயிலை மீட்க முயற்சி செய்தபோது மயிலை மீட்கமுடியவில்லை. உடனடியாக இதுகுறித்து தங்கராசு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை உயிருடன் மீட்டனர். இது அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.