பி.ஜ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பரமத்தி பி.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மயில்சாமி அண்ணாதுறை பங்கேற்பு.

Update: 2024-08-19 13:15 GMT
பரமத்திவேலூர்,ஆக.19- நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் அமைந்துள்ள பி.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று  நடைபெற்றது.பி.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி மற்றும் துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 திட்ட இயக்குனருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டதுடன் 300- க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விரும்பிய இலக்கை எட்டுவது மட்டும் வெற்றி அல்ல கிடைக்கும் வாய்ப்பை விடாமுயற்சியுடன் விரும்பி உழைப்பது தான் வெற்றி என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக கல்லூரியின் தாளாளர் கணபதி  வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முதல்வர் ராஜசேகர் விருது பெறுபவர்களின் விவர அறிக்கையைச் சமர்ப்பித்தார். விழாவில் பி.ஜி.பி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் முதன்மையர் பெரியசாமி நன்றி கூறினார்.

Similar News