வெல்லம் விலை உயர்வு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி.

பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம் சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் விலை உயர்வடைந்துள்ளதால் வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Update: 2024-08-19 13:21 GMT
பரமத்தி வேலூர்,ஆக.19: பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம்,  அச்சு  வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,430 வரையிலும் ஏலம் போனது. இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில்  உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும், அச்சு வெல்லம்  சிப்பம் ஒன்று ரூ.1,370 வரையிலும்  ஏலம் போனது. கரும்பு கடந்த வாரம் டன் ஒன்று ரூ. 3 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. தற்போது கரும்பு டன் ஒன்று ரூ.3 ஆயிரத்து 300- கங்கு விற்பனையாகி வருவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

Similar News