ராஜா வாய்க்கால் கரையோரத்தில் கொட்டியுள்ள குப்பைகளை அகற்ற நோட்டீஸ்.
பரமத்தி வேலூரில் ராஜா வாய்க்கால் கரையோரத்தில் மலைபோல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்
பரமத்தி வேலூர்,ஆக.20:- பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே ராஜா வாய்கால் கரயோரத்தில் மலைபோல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், வேலூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இராஜா வாய்க்கால் ஜேடர்பாளையத்தில் தொடங்கி நஞ்சை இடையாறு வரை செல்கின்றது இதன் மூலம் சுமார் 16000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. தற்சமயம் மேற்கண்ட பரமத்தி வேலூர் கோட்டமேடு (வேலூர் கரூர் சோதனை சாவடி அருகில்) பகுதியில் பேரூராட்சி குப்பைகளை மலைபோல் குவித்து வைத்துள்ளீர்கள். இதனால், தண்ணீர் மாசு ஏற்பட்டு பயன்படுத்த இயலாத சூழநிலையில் உள்ளது. எனவும் மேலும் இதனால் பயிர்கள் நோய் ஏற்படுவதாகவும், கால்நடைகள் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், மனிதர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். எனவே இந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்திடவும். மேலும் இவ்விடத்தில் இனிவரும் காலங்களில் குப்பைகள் கொட்டாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.