கந்தசாமி கண்டர் கல்லூரி,வேலூர் தமிழ்ச்சங்க அறக்கட்டளையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி மற்றும் வேலூர் தமிழ்ச்சங்க அறக்கட்டளையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர், ஆக. 20: பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி மற்றும் வேலூர் தமிழ்ச்சங்க அறக்கட்டளையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கட்கிழமை ஏற்படுத்தப்பட்டது. கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் பி.சாந்தி, தமிழ்த் துறை தலைவர் முனைவர் திலகம், ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ், தமிழ்ச்சங்க அறக்கட்டளை தலைவர் (பொ) ஜி.இக்பால், செயலாளர் சரவணன், பொருளாளர் செந்தில்குமரன், வெள்ளி விழாக்குழு தலைவர் அரசு வழக்கறிஞர் கி.பாலகிருஷ்ணன், விளம்பரக்குழு தலைவர் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப் புரிந்துணவு ஒப்பந்ததில் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஒருமித்து இணைந்து செயல்படுதல். தமிழ் அறிஞர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் ஆய்வு வளர்ச்சிக்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உரிய பணிகளை மேற்கொள்ளுதல். பொதுமக்களுக்கு தமிழின் தொன்மை வளமையை எடுத்துக் கூறி மொழிப்பற்றை வளர்த்தல். கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்தி சான்றிதழ் வழங்குதல். தமிழ் வளர்ச்சி தொடர்பான தேசியக் கருத்தரங்கம் பன்னாட்டுக்கருத்தரங்கம். ஆய்வரங்கம் மற்றும் பயிலரங்கம் போன்றவற்றை நடத்துதல் உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.