வேலகவுண்டம்பட்டி அருகே இளம் பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே இளம்பெண்தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்
பரமத்தி வேலூர்,ஆக.20: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இளநகர் பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது30). இவர் இளநகர் பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி (23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 5வயது மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேவி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நி லையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு தண்டாயுதபாணி வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி தேவி வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகதெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் தேவியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தேவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தேவியிக்கு திருமணம் நடைபெற்று 6 ஆண்டுகளே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி வருகின்றார்.