காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

கூட்டம்

Update: 2024-08-20 08:40 GMT
இன்று 20.08.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். கடந்த ஜூலை மாதத்தில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த 01 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 02 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 09 காவல் ஆய்வாளர்கள், 04 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 01 தனிப்பிரிவு காவலர் என மொத்தம் 17 காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News