சுடுகாட்டு பாதை கேட்டு ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு

சுடுகாட்டு பாதை கேட்டு ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு

Update: 2024-08-20 12:00 GMT
சுடுகாட்டு பாதை கேட்டு ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு
செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டம் அச்சிறுப்பாக்கம் குறுவட்டத்திற்குட்பட்ட பொற்பனங்கரணை கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வள்ளுவ ஆதிதிராவிட இனமக்கள் வசித்துவருகின்றனர். இந்த மக்கள் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 5,6 தலைமுறைகளாக தங்களது பகுதியில் இறந்த சடலங்களை சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக கல்லியக்குணம் கிராமத்தை சார்ந்த அருணகிரி என்பவர் பெயரில் மேற்படி மயானப்பாதை உள்ளடக்கிய இடம் புன்செய் சர்வே எண். 168/7B, பரப்பு 1.34.5 ஏர்ஸ். பட்டா எண்.15 என்று யூ டி ஆர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மயானத்திற்கு செல்லும் பாதை கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளுவ ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அருணகிரி இறந்துவிட்டார். அருணகிரி இறந்த நிலையில் அவரது மகன் பாபு த/பெ. அருணகிரி என்பவர் கடந்த 1 வருட காலமாக வள்ளுவ ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திவரும் மயான பாதையில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்லக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தும்,மயான பாதையை உழுது பாதையின் வழித்தடத்தை அழித்துள்ளார். தடுப்பு வேலி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதை கேட்கச்சென்ற இந்து வள்ளுவ ஆதிரதிராவிட மக்களான அப்பகுதி மக்களை அடியாட்களை கொண்டு மிரட்டியும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் இந்த வழியாக இனிமேல் வர வேண்டாம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இந்து வள்ளுவ ஆதிதிராவிட மக்களுக்கு இந்த வழியை தவிர மயானத்திற்கு செல்ல வேறு எந்த பாதையும் இல்லை. இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் மயானசாலையை தடுக்கும் வகையில் பாபு என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் வள்ளுவ ஆயிரம் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பாபுவின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபுவின் தந்தை அருணகிரி பேரில் யூடியாரில் தவறுதளாக வழங்கப்பட்டுள்ள 15-ம் எண் பட்டாவை இரத்து செய்வதுடன் இம்மனு மீது வருவாய் துறையின் மூலம் இறுதி உத்தரவு வரும் வரை பாபுவோ அவரை சார்ந்தவர்களோ மயான பாதையில் எந்தவிதமான இடையூறோ ஆக்கிரமிப்போ, தொந்தரவோ அல்லது அப்பாதையை அடைக்கும் செயல்களிலோ ஈடுபடக்கூடாது. பொதுமக்கள் மேற்கண்ட சர்வே எண்ணில் உள்ள மயானபாதையை தொடர்ந்து பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தார். அப்போது மாவட்ட துணை செயலாளர். மு.முனிச்செல்வம், ததீஒமுமேனாள் மாநிலக்குழு உறுபினர். ம.பா.நந்தன், தமுஎகச செங்கை கிளை செயற்குழு உறுப்பினர்.பிரகாஷ், வழக்குரைஞர் சம்பத் மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

Similar News