எஸ்.வி.பி நீட் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவி தமிழகத்தில் முதலிடம்.

திருச்செங்கோடு சக்கராம்பாளையம் எஸ்.வி.பி நீட் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவி தமிழகத்தில் முதலிடம் பெற்று சாதனை.

Update: 2024-08-20 14:29 GMT
பரமத்திவேலூர், ஆக.20-நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சக்கராம்பாளையத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.பி(ஸ்ரீ வித்யாபாரதி மெட்ரிக் பள்ளி) நீட் பயிற்சி மையத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஓராண்டு கால நீட் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓராண்டு நீட் பயிற்சியைப் பெற்றனர். நடந்து முடிந்த நீட் தேர்வில், நாமக்கல் எஸ்.வி.பி நீட் பயிற்சி மையத்தில் தமிழ்வழியில் பயின்ற மாணவி ரூபிகா 720-க்கு 669 மதிப்பெண்கள் பெற்று  தமிழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.  600 மதிப்பெண்களுக்கு  Pமேல் 9 பேரும், 500  மதிப்பெண்களுக்கு  மேல் 36 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும் பெற்றுள்ளனர். நீட் பயிற்சி மையத்திற்குப் பெருமை சேர்த்த மாணவ,  மாணவிகளை நீட் பயிற்சி மையத் தலைவர் சுப்பிரமணியம், தாளாளர், சுதா ராஜேந்திரன்,  இயக்குநர்கள். ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News