உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் திருக்கோவிலூர் வட்டம், காட்டுப்பையூர் கால்நடை மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு கால்நடை மருந்தகத்தில் உள்ள வருகைப் பதிவேடு, மருத்துவர்கள் எண்ணிக்கை,தடுப்பூசி பதிவேடு,கிராமங்களின் எண்ணிக்கை, கால்நடைகளின் எண்ணிக்கை,மக்கள் தொகை விபரம், தடுப்பூசி பதிவேடு, சிகிச்சைப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து கால்நடைகளுக்கு தொடர்ந்து தரமான சிகிச்சைகள் வழங்குவதை உறுதி செய்ய கால்நடை மருத்துவருக்கு அறிவுறுத்தினார்கள்.