விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் திரிசதி அர்ச்சனை பூஜை.
பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் திரிசதி அர்ச்சனை பூஜை நடைபெற்றது.
பரமத்திவேலூர், ஆக.21- பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று திரிசதி அர்ச்சனை பூஜை நடைபெற்றது. திரிசதி அர்ச்சனை என்பது முருகனுக்கு செய்யப்படும் ஒரு சிறப்பு வழிபாடு ஆகும். இந்த வழிபாட்டின் போது, முருகனின் 300 பெயர்கள் பாடப்படுகின்றன. இந்த வழிபாட்டின் மூலம், முருகனின் அருள் பெறப்படுகிறது. இந்த வழிபாடு செய்யப்படுவதால் முருகனின் அருள் கிடைக்கும். வாழ்க்கையில் சிறந்த வளர்ச்சியும், கல்வி மற்றும் செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே திரிசதி அர்ச்சனை பூஜை முருகப்பெருமானுக்கு செய்யப்படுகிறது. பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று நடைபெற்ற திரிசதி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.