திருப்பத்தூர் அருகே கனமழை காரணமாக தரைப்பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்கள் அவதி,

திருப்பத்தூர் அருகே கனமழை காரணமாக தரைப்பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்கள் அவதி, பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் தவறி விழுந்தபள்ளி மாணவியால் பரப்பரப்பு

Update: 2024-08-21 08:13 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கனமழை காரணமாக தரைப்பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்கள் அவதி, பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் தவறி விழுந்தபள்ளி மாணவியால் பரப்பரப்பு திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம்,காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள ஓட்டேரி டேமிலிருந்து மழைநீர் வெளியாகி காமராஜ் நகர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அவ்வழியாக செல்லக்கூடிய மாணவர்கள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் சிம்மனபுதூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று கல்வி பயில வேண்டும் இந்த நிலையில் தரைப்பாலத்தின் மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் பள்ளிக்கு செல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் தாதராமனூர் பகுதியை சேர்ந்த அன்புராஜா பானுமதி மகளான நிவேதா சிமனப்புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியி ஆறாம்வகுப்பு படித்துவரும் நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அப்போது அதே பகுதியில் உள்ள சுடுகாடு பள்ளம் பகுதியில் சென்றபோது கால்நழுவி பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வரும் ராஜேந்திரன் என்பவர் பள்ளி சிறுமி மழைநீரில் அடித்து செல்வதை கண்டுஅதிர்ச்சி அடைந்து அந்த மாணவியை மீட்டுள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த சிறுமையின் பெற்றோர் சிறுமியை ஆண்டியூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு பள்ளி சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் பொழுதும் தரைப்பாலத்தின் மீது கனமழை பெருக்கக்கெடுத்து ஓடுவதாகவும், இது குறித்து அப்பகுதிமக்கள் கடந்த ஆண்டு பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் என அனைவரிடமும் தங்களுக்கு இந்தப் பகுதியில் டேம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இதுவரை அந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இதனால் மீண்டும் தரைப்பாலத்தின் மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் ஆண்கள் என அனைவரும் தரை பாலத்தை கடக்க முடியாமல் அவதிபட்டு வரும் நிலை உருவாகியுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் மழைநீரில் ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News