வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், ஆக. 21- நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே பொம்மம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70), விவசாயி. இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை சரியாகாததால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.