ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா
மதுராந்தகம் அருகே ராகவேந்திரர் சுவாமிகள் பிருந்தாவனத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் நடிகர் செந்தில் தனது துணைவி யாருடன் பங்கேற்பு;
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சாமிகள் பிருந்தாவனத்தில் இன்று ராகவேந்திரா சாமிகள் பிருந்தாவனத்தின் 30-ஆம் ஆண்டு ஆராதனை பெருவிழா மற்றும் மந்திராலயம் மகான் ராகவேந்திரா சாமிகளின் 353 ஆம் ஆண்டு ஆராதனை பெருவிழா என முப்பெரும் விழா இந்த பிருந்தாவன் ஆலயத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பகல் இரண்டு மணி வரை விழா நடைபெறுகிறது. இன்று மதியம் மகா மங்கள ஆராதனை சுவாமிகள் யோகி ரகோத்தமா சித்தர் ஆராதனை செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.. இந்த விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது துணைவியார் உடன் கலந்து கொண்டு யோகி ரகோத்தமா சித்தர் சாமிகளிடம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.