மதுராந்தகம் நகர தமாகா சாா்பில் ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா

மதுராந்தகம் நகர தமாகா சாா்பில் ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது;

Update: 2024-08-21 14:04 GMT
மதுராந்தகம் நகர தமாகா சாா்பில் ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. மதுராந்தகம் புறவழிச்சாலையில் நடைபெற்ற நிகழ்வில் கொடி ஏற்றப்பட்டது. பின்னா் பஜாா் வீதியில் தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம், இனிப்புகள் ஆகியவற்றை செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவா் ஹைவே இன் இளங்கோ வழங்கினாா். இந்நிகழ்வில் கட்சி நிா்வாகிகள் ஆதிகேசவலு, எம்.கிரிதரன், பழனி, மோச்சேரி குமாா், உலகநாதன், புண்ணியமூா்த்தி, முத்துகுமாா், துரைபாபு, சுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Similar News