பிலிக்கல்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.
பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர், ஆக.21- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம். பிலிக்கல் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆனங்கூர், அ.குன்னத்தூர் ,பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம் ஆகிய 5 ஊராட்சி களுக்காண மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாமக்கல் மாவட்ட திட்ட இயக்குனர் ( மகளிர் திட்டம்) செல்வராஜூ தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்( சத்துணவு) பரமேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திர பிரசாத், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபிலர்மலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கபிலர்மலை வட்டார அட்மா திட்ட தலைவர் சண்முகம் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட 15 துறை அலுவலர்களிடம் கொடுத்து கணினியில் பதிவுசெய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மனுக்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், மின் இணைப்பு முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை,மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்களுக்கு தீர்வு காணப்பட்டு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டது. மற்ற மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். தீர்வு முகாமில் 15 துறைகள் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் விவசாயிகள் பொதுமக்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர்கள் ஜெகதீசன், மணிகண்டன், சித்தேஸ்வரி, ஆனங்கூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், ஆனங்கூர் ஊராட்சி செயலர் சந்திரன்,குன்னத்தூர் ஊராட்சி தலைவர் ரமேஷ், ஊராட்சி செயலர் அன்பழகன், பிலிக்கல்பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன்,ஊராட்சி செயலர் சசிகுமார், சேளூர் ஊராட்சி தலைவர் ரோகிணி சதீஷ்ராஜன் கொந்தளம் மணிமேகலை தலைவர் பாலுசாமி, ஊராட்சி செயலர் விஜயகுமார் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய மற்றும் கபிலர்மலை ஒன்றிய பகுதியில் உள்ள ஊராட்சி செயலர்கள்,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.