வாணியம்பாடி அருகே சாலை அமைக்கும் பணிக்கு கதிர் ஆனந்த் எம்பி பூமி பூஜை போட்டு துவக்கி
வாணியம்பாடி அருகே சாலை அமைக்கும் பணிக்கு கதிர் ஆனந்த் எம்பி பூமி பூஜை போட்டு துவக்கிவைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் சாலை போடும் பணியினை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம், சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சீக்கணகுப்பம் முதல் ஜமின் கொள்ளை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கும் பணியினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் MP சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமுடி, ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமோதிரன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன், பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி தொழிலாளர் அணி அமைப்பாளர் மு.பழனி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி ராஜா, நாட்றம்பள்ளி ஒன்றியக்குழுத் து.தலைவர் டி.தேவராஜி மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.