நிலக்கடலை ஆதார விதை பண்ணைக்கு சான்றளிப்பு.
பரம்தி அருகே நிலக்கடலை ஆதார விதை பண்ணைக்கு சான்றளிப்பு.
பரமத்திவேலூர், ஆக.22- பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள நடந்தை கிராமத்தில் முத்துசாமி என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை ஆதார விதை பண்ணை டி.எம்.பி 14 மற்றும் சித்தம்பூண்டி கிராமத்தில் தமிழரசி என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை ஆதார விதைப் பண்ணை வி.ஆ.ர்ஐ 9-ஆகிய விதை பண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையின் உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது விதைப்பண்ணையின் முக்கியத்துவம், பயிர்களின் எண்ணிக்கையை பராமரித்தல், ஜிப்சம் இடுதல் மற்றும் மண் அனைத்தலின் முக்கியத்துவம், நுண்ணூட்டச் சத்து மேலாண்மை, பூச்சி நோய் தாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டியதன் அவசியம், பூக்கும் சமயத்தில் நிலக்கடலை பயிருக்கு ரிச் அடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். ஆய்வின் போது பரமத்தி வட்டார உதவி விதை அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.