வினைதீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

அருள்மிகு ஸ்ரீ வினைதீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

Update: 2024-08-22 08:49 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட கீழ்பட்டு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ வினைதீர்க்கும் விநாயகர் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம் சங்கர் சிவாச்சாரியார் தலைமை கொண்ட சிவாச்சாரியார்கள் குழுவினர் யாகசாலை பூஜையில் வேத மந்திரங்கள் முழங்க கங்கா, யமுனா, கோதாவரி, நர்மதா, மற்றும் ராமேஸ்வரம், உள்ளிட்ட கங்கை நதியிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, இன்று காலை மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி தீப ஆராதனை காண்பித்து மஹா கும்பாபிஷேகம் கிராம பெரியோர்களின் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வினை தீர்க்கும் விநாயகப் பெருமானின் அருளை பெற்றனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News