காங்கேயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
காங்கேயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து டிஎஸ்பி மாயவன் தலைமையில் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழாவின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர், இந்து மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ், ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் பர்வீனா பானு, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனந்தநாயகி, உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.