சிறுவனுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேட்டரிங் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த மகளிர் காவல் துறையினர்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி நெருப்பெருச்சல் பகுதியை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி பாலசுப்பிரமணி வயது 48 . இவர் அப்பகுதி சேர்ந்த 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.